A Thread on Mutual Funds Types:

September 11, 2021


மியூச்சுவல் ஃபண்ட் வகைகளைப் பற்றிய பதிவு:


மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டமாகும்இது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணம் சேகரித்து பங்குபத்திரங்கள்அரசு பத்திரங்கள் மற்றும் பண சந்தை போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன.


மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம்நிதி மேலாளர்களால் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில்திட்டத்தின் முதலீட்டு நோக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யப்படுகிறது.


இந்த கூட்டு முதலீட்டுத் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருமானம்முதலீட்டாளர்களிடையே அவர்களின் முதலீட்டுதொகைக்குக்கேற்ப விநியோகிக்கப்படுகிறது.


மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்:

அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் இந்த ஐந்து வகைகளில் வகைப்படுத்தப்படும்

a. ஈக்விட்டி (Equity Funds)

b. கடன் (Debt Funds)

c. ஹைப்ரிட் (Hybrid Funds)

d. தீர்வு சார்ந்த (Solution oriented Funds)

e. மற்றவை (Other Funds)


a.Equity Funds:

ஈக்விட்டி திட்டங்கள் பொதுவாகப் பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களில் செய்யும் முதலீட்டுத் திட்டங்கள் ஆகும்:

பங்குச் சந்தை நிறுவனங்களை மூலதனத்தின் அடிப்படையில் largecap, midcap மற்றும் smallcap என்று பிரிக்கப்படுகிறது:


Large Cap - பங்குச் சந்தை முதல் 100 நிறுவனங்கள்.


Mid Cap - பங்குச் சந்தை முதல் 101-250 நிறுவனங்கள்.


Small Cap - பங்குச் சந்தை முதல் 251 பின் வரும் நிறுவனங்கள் ஆகும்.


Equity Funds மொத்தம் 10 வகைகள் உள்ளனஅவற்றில் முக்கியமானவை:


FlexiCap Fund:

Large cap, Midcap மற்றும் Smallcap பங்குகளில் குறைந்தபட்ச முதலீடு 65% முதலீடு செய்யும் ஒரு ஈக்விட்டி திட்டம்.

 

MultiCap Fund:

Large cap பங்குகளில் குறைந்தபட்சம் 25%, Mid cap ல் குறைந்தபட்சம் 25% மற்றும் smallcap ல் குறைந்தபட்சம் 25% முதலீடுஇருக்கும்.


-Large Cap Fund:

Large cap பங்குகளில் குறைந்தபட்சம் 80%, முதலீடு இருக்கும்.


-Large & Mid Cap Fund

Large cap பங்குகளில் குறைந்தபட்சம் 35%, Mid cap ல் குறைந்தபட்சம் 35% முதலீடு இருக்கும்


-Mid Cap Fund:

Midcap பங்குகளில் குறைந்தபட்ச முதலீடு 65% இருக்கும்.


-Small Cap Fund:

Smallcap பங்குகளில் குறைந்தபட்ச முதலீடு 65% இருக்கும்.

 

-Sectoral Fund:

ஈக்விட்டி திட்டம் முக்கியமாக IT, FMCG, Banking, Power, Infra மற்றும் pharma போன்ற குறிப்பிட்ட துறைகளின் பத்திரங்களில்முதலீடு செய்கின்றனஇதில் குறைந்தபட்ச முதலீடு 80% இருக்கும்.


-ELSS Fund:

Equity Linked Savings Scheme திட்டம் முக்கியமாக வருமான வரி விலக்கு மற்றும் மூன்று ஆண்டுகள் lock-in உடன் உள்ளஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்.


b.Debt Funds:

Debt Funds பெருமளவு பத்திரங்கள்அரசு பத்திரங்கள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் போன்ற நிலையான வருமானம்தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.


-Debt Funds மொத்தம் 16 வகைகள் உள்ளனஅவற்றில் முக்கியமானவை:


-Money Market Fund: 1 ஆண்டு வரை முதிர்வு கொண்ட முதலீடு.


-Short Duration Fund: 1-3 ஆண்டுகளுக்கு இடையில் இருக்கும் முதலீடு.


-Medium Duration Fund: 3-4 ஆண்டுகளுக்கு இடையில் இருக்கும் முதலீடு.


-Medium to Long Duration Fund: 4-7 ஆண்டுகளுக்கு இடையில் இருக்கும் முதலீடு.


-Long Duration Fund: 7 ஆண்டுகளுக்கும் மேலான முதலீடு.


-Corporate   Bond Fund: முக்கியமாக அதிக மதிப்பிடப்பட்ட கார்ப்பரேட் பத்திரங்களில் 80% முதலீடு செய்கிறது.


-Banking and PSU Fund: வங்கிகள்பொதுத்துறைபொது நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கடன் கருவிகளில் முதலீடுசெய்யும் திட்டம்.


-Gilt Fund: அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம். G Secs இல் குறைந்தபட்ச முதலீடு 80% 

இருக்கும்.


c. Hybrid Funds:

ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றனஇது Equity, Debt மற்றும் தங்கத் திட்டங்களில் கலவையாகஇருக்கலாம்.


Hybrid Funds மொத்தம் 6 வகைகள் உள்ளனஅவற்றில் முக்கியமானவை:


-Multi Asset Allocation: குறைந்தபட்சம் மூன்று திட்டங்களில் Equity, Debt மற்றும் தங்கம் குறைந்தபட்சம் 10% ஒதுக்கீட்டில்முதலீடு செய்யப்படுகின்றன


-Arbitrage Fund: Arbitrage ஃபண்ட் மேலாளர் ஒரே நேரத்தில் பணச் சந்தையில் பங்குகளை வாங்கி Futures அல்லது derivatives சந்தைகளில் விற்கிறார்


d. Solution Oriented Funds:

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வூதியத் திட்டமிடல் மற்றும் குழந்தையின் எதிர்காலக் கல்விபோன்ற நீண்ட கால  நோக்கங்களுக்கான நிதித் திட்டமிடலுக்கு இந்த திட்டங்கள் உதவியாக இருக்கும்.

Solution Oriented Funds மொத்தம் 2 வகைகள் உள்ளன:


-Retirement Fund மற்றும் Children’s Fund:

இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு Equity, Debt அல்லது கலவையாக இருக்கலாம்பொதுவாக இந்ததிட்டங்களில் குறைந்தபட்சம் ஐந்து வருட  Lockin, அதிகபட்ச ஓய்வூதிய வயது அல்லது குழந்தை மேஜர் ஆகும் வரைகாலத்தைக் கொண்டிருக்கும்.


e. Other Funds 2 வகைகள் உள்ளன:

-Index Funds / ETFs:

Index Funds/ ETFs என்பது Nifty, Sensex போன்ற பங்கு சந்தை குறிப்பிட்ட Index ல் பின்பற்றும் பங்குகளில் / துறை / தொழில் / பத்திர / commodity சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.


-Fund Of Fund:

இதில் மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர் நேரடியாகப் பங்கு அல்லது பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாகஉள்நாட்டுமற்றும் வெளிநாடு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் திட்டமாகும்.



தற்போது இந்தியாவில் 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவங்கள் மற்றும் 2500 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன.

இவற்றில் அனைத்து வகையான மியூச்சுவல் ஃபண்ட்களிலும் முதலீடு செய்ய தேவையில்லை தங்களின் நிதி நிலைமைமுதலீட்டுத் தேவைகளின் அடிப்படையிலும் திட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.




Content & Created by  @learning_guy_ 

You Might Also Like

0 comments