சில வெளிப்படுத்தாத, உங்கள் சின்ன புன்னகையின் மறுபக்கம்!!!
உங்க கண்ல பட்ட ஒரு பொண்ணு இருக்கும். சுமாரா இருக்கும், அவ்ளோ கலர்லாம் இல்ல, மேக்கப் கூட பூசமாட்டாங்க, ஒல்லிலாம் இல்ல, அவங்க இயல்புக்கு நடந்துப்பாங்க, சாதாரணமா பேசுவாங்க, சீன்லாம் போடமாட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் பழகுறீங்க.
அவங்க மேல ஒரு ஈர்ப்பு வந்துடுது. எவ்ளோ அழகான பொண்ணுங்கலாம் இருப்பாங்க ஆனா அந்த ஒரு குந்தாணி மட்டும் தான் உங்க கண்ணுக்கு அழகா தெரிவா, முகத்துல இல்ல குணத்துல செயல்களில,etc. அவ மேல ஒரு எல்லையற்ற காதல் உருவாகும். கண்மூடித்தனமா அன்பு வைப்பீங்க. எதையும் செய்யலாம் அவங்களுக்காகனு தோணும்.
இதெல்லாம் பாத்துட்டு, அந்த பொண்ணு என்ன தெரியுமா சொல்லும்?
1. நான் உன்ன லவ் பண்ணல.
2. நீ பண்றதுக்கு பேரு லவ்வா?
3. பைத்தியமாடா நீ?
4. உன் வேல என்னவோ அத மட்டும் பாரு.
5. என் உயிர வாங்காத.
6. ஏன் இப்டி நடந்துக்குற?
அப்டின்னு கடந்துபோக வாய்ப்பு உண்டு.
அவங்கள்ட்ட பேசலனா இல்ல பார்க்கலனா பெருஞ்சோகம் அடைவீங்க. பொஸஸிவ்னஸ் அதிகரிக்கும். கொஞ்சம் ரஃப்பா நடந்துப்பீங்க. அன்பு வெரியா மாறும். அந்த பொண்ணு இல்லனா வாழ்க்கையே இல்லனு தோணும். அவ மேல பைத்தியம் ஆகிடுவீங்க. உங்கள மயங்க வெச்சு கெறங்க வெச்சு பித்து புடிக்க வச்சு நீங்களும் அலைவீங்க.
நீங்க அவ மேல வச்சது ஒரு லிமிட்டே இல்லாத அன்பு, பாசம், நேசம்னும்... நீங்க காட்டுனத அவங்களும் திரும்ப காட்ட எதிர்ப்பார்த்தீங்கனு தெரியாமலும் போயிடும்.
அவங்களுக்காக நீங்க ஒதுக்குன நேரம் காலம் போனா வரலாம் ஆனா நம்ம கூடவே இருக்குற அம்மா அப்பா என்ன பாவம் செய்தாங்க...
பொண்ணு மேல அளவுக்கடங்கா அன்பும் ஆசையும் வைங்க. ஆனா அத தவிர்த்தும் நமக்கு வீட்ல ஒரு குடும்பம் இருக்குன்னும் நெனச்சுட்டே செயல்படுங்க. இந்த பொண்ணு இல்லனா இன்னொருத்தி ஆனா அம்மா அப்பா ஒன்னு தான். அதுக்கப்றம் அந்த பொண்ணையே மணம்செய்ய நேரிட்டுச்சுனா உங்களவிட அதிர்ஷ்டசாலி யாருமே இல்ல!
ஆனா.... ஆனா.. நீங்க அந்த பொண்ணு மேல வைத்த அன்பு அதிகரிக்கலாமே தவிற கம்மி ஆகிடவே கூடாது. இன்னொருத்தி மேல மோகமும் வரவே கூடாது. தொட்டா தான் தப்பு அப்டின்ற சிந்தனைய விட்டு வெளில வந்து நமக்குன்னு ஒருத்தி இருக்கும்போது நாம ஏன் கண்டவள தேடி போவனும்..
இவ கிட்ட நம்மள ஈர்க்க வெச்சது இன்னொருத்தி கிட்ட இருக்க வாய்ப்பு இல்லனு லவ் பண்ணுங்க ஜி லைஃப் ஓஹோன்னு இருக்கும்😍😍😍
#Copied